ரயில் பயணிகளின் மருத்துவ உதவிக்கு ரூ.100 நிர்ணயம் -இந்திய ரயில்வே முடிவு

ரயில் பயணத்தில் மருத்துவ உதவிக்கு 100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

ரயில் பயணத்தின் போது பயணிகளுக்கு திடீரென ஏற்படும் மாரடைப்பு, மூச்சுத்திணறல் போன்ற உடல் நல பாதிப்புகளுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்து தரப்படுகிறது.இந்த மருத்துவ உதவி இதுவரை ரயில் பயணிகளுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில் பயணத்தின் போது பயணிகளுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்கு கட்டணம் நிர்ணயிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

அதன்படி 100 ரூபாய் மருத்துவ ஆலோசனை கட்டணமாக டிக்கெட் பரிசோதகரிடம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு ஊசி, மருந்து, மாத்திரைகள் போன்ற தேவையான சிகிச்சை அளிக்கப்படும். தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் அவசர மருத்துவ மையம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version