தடகள வீரங்கனைக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி

சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்க உள்ள கல்லூரி மாணவி பயிற்சி பெற்று மேலும் பல சாதனைகள் படைக்க அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த வடசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் புனிதா, கூலித் தொழிலாளி ராமசாமியின் மகளான இவர், நாமக்கல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தடகள போட்டிகளில் நீளம் தாண்டுதலில் சாதனை புரிந்து வருகிறார். இவர் தேசிய அளவிலான போட்டிகளிலும் முதலிடம் பெற்று சாதனைபுரிந்துள்ளார். இதேபோல், இலங்கையில் நடைபெற்ற சவுத் ஏசியன் ஜூனியர் தடகள போட்டிகளில் பங்கேற்ற புனிதா, நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்நிலையில் புனிதாவின் திறமையை ஊக்கப்படுத்தும் விதமாகவும், சர்வதேச போட்டிகளில் பங்கேற்று மேலும் சாதனை படைத்து, தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு 10 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, தடகள வீராங்கனை புனிதாவிற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

Exit mobile version