வங்கி மற்றும் அலைபேசி சேவைகளுக்கு ஆதாரை மட்டுமே, ஆதாரமாக கேட்டால் 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. வங்கி மற்றும் தொலை தொடர்பு சேவைகளுக்கு ஆதார் கட்டாயமல்ல என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது.
எனினும், அலைபேசி சேவை மற்றும் வங்கி கணக்குகளுக்கு தொடர்ந்து ஆதார் விவரங்கள் கேட்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திங்கள் கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அலைபேசி சேவை மற்றும் வங்கி கணக்குகள் தொடங்க ஆதார் அட்டையை மட்டுமே ஆதாரமாக கேட்டால் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது.
விதிகளை மீறும் தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர்கள், வங்கி ஊழியர்களுக்கு 3 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.