உரிய ஆவணமின்றி புனேவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.1.50 கோடி பறிமுதல்

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூர் சோதனை சாவடியில் உரிய ஆவணமின்றி புனேவில் இருந்து கொண்டு வரப்பட்ட 1.50 கோடி ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தாளவாடி அடுத்த ஆசனூர்சோதனை சாவடியில், நேற்று இரவு மதுவிலக்கு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புனேவில் இருந்து வந்த கார் ஒன்றை சோதனை செய்ததில் 1.50 கோடி பணம் இருந்ததை கண்டு பிடித்தனர். பிறகு இது குறித்து ஆசனூர் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கபட்டது. விசாரணையில் புனேவில் இருந்து கேரள மாநிலம் கொச்சினுக்கு கொண்டு செல்வதாகவும், அந்த பணம் தங்கள் நிலத்தை விற்ற பணம் எனவும் கூறினர். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தையும், காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version