ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது..
என்னதான் இருசக்கர வாகனங்களுக்கு பெரிய வரவேற்பு இருந்தாலும் ராயல் என்ஃபீல்டு என்று சொன்னால் தனி மவுசுதான். ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் வாடிக்கையாளர்கள் பரிசு வழங்குவது கொண்டு ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதில் புல்லட் 500, தண்டர்பேர்டு 500 , தண்டர்பேர்டு 500 எக்ஸ் ஆகிய மாடல்கள் விற்பனையிலிருந்து விளங்கிக் கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் அதன் அதிகாரபூர்வ இணைய பக்கத்தில் இருந்தும் குறிப்பிட்ட மாடல்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால் ஸ்டாக்கில் உள்ள புல்லட் 500, தண்டர்பேர்டு 500 , தண்டர்பேர்டு 500 எக்ஸ் உள்ளிட்ட மாடல்கள் அதன் டிமாண்டிற்கு ஏற்ப விற்பனை செய்யப்படும் என்று ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.. இதற்கு காரணம் சமீபத்தில் 500 சிசி பைக்குகள் மீதான மோகம் குறைந்து வருவதுதான் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பெண்கள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையிலும் மலிவான விலையிலும் புதிய ரக பைக் தயாரிக்கும் பணியில் ராயல் என்ஃபீல்ட் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..