காஞ்சிபுரம் நகரை கலங்கடித்த பிரபல ரவுடிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தில் கோலோச்சி வந்தவர் ரவுடி ஸ்ரீதர். காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது, கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் செய்வதாகச் சொல்லி நிலத்தை அபகரிப்பது உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். 2017-ல் கம்போடியாவில் ஸ்ரீதர் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மறைந்த தாதா ஸ்ரீதரின் இடத்தை பிடிப்பதற்காக அவனிடம் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த தினேஷ் மற்றும் ஸ்ரீதரின் மைத்துனர் தணிகாசலம் ஆகிய இரண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டு காஞ்சிபுரத்தில் பல கொலைகள், கட்டப் பஞ்சாயத்துகள், வழிப்பறி, ஆள் கடத்தல் போன்ற குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததால் காஞ்சிபுரம் மாவட்டம் பதட்டமான சூழ்நிலையிலேயே காணப்பட்டது .
இவர்களை பிடிப்பதற்கு காவல்துறை எவ்வளவு முயற்சிகள் எடுத்தும் அனைத்து முயற்சிகளிலும் இவர்கள் தப்பித்து கொண்டே இருந்தனர். மேலும் காஞ்சிபுரம் முழுவதும் இவர்கள் அடியாட்களை வைத்துக்கொண்டு பலவிதமான குற்றச் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். தினேஷை பிடிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
சுமார் 45 நாட்களாக அவர்களைப் பின் தொடர்ந்து கண்காணித்து வந்த மாவட்ட தனிப்படை ஒகேனக்கல் பகுதியில் வைத்து கைது செய்ய முயன்றது . அப்போது இவர்கள் ஒகேனக்கல்லில் இருந்து பரிசலில் தப்பி கர்நாடக மாநிலத்துக்கு ஓடிவிட்டனர்.பின்னர் ஒவ்வொரு பகுதியாக இவர்கள் தப்பித்துக் கொண்டே சென்ற நிலையில் கடைசியாக மைசூர் பகுதியிலிருந்து நீலகிரி பகுதிக்கு வந்து மசனகுடிிி என்ற இடத்தில் சொகுசு பங்களாவில் தங்கிி இருக்கும் போது காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படை அவளை சுற்றி வளைத்து கைது செய்தது. அப்போது அவர்கள் வைத்திருந்த கையெறி குண்டுகள் பட்டாக் கத்திகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு காஞ்சிபுரத்திற்கு கொடுவரப்பட்டன. காஞ்சிபுரம் நகரை கலங்கடித்த பிரபல ரவுடிகள் கைது செய்யப்பட்டதற்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.