சென்னை மாதவரத்தில் ஐந்து ஆண்டுகள் தலைமறைவாக இருந்த மாதவரத்தை சேர்ந்த பிரபல ரவுடி நாகராஜ் கைது செய்யப்பட்டார். மாதவரத்தில் உள்ள நூறு குடோனை குத்தகைக்கு எடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக 2014ம் ஆண்டில் முருகன் என்பவரும் 2015 ம் ஆண்டு போத்தீஸ் முரளி என்பவரும் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான மாதவரத்தை சேர்ந்த நாகராஜ் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.
இந்தநிலையில் அதே நூறு குடோன் விவகாரத்தில் மேலும் ஒருவரை கொலை செய்ய நாகராஜ் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறைக்கு கிடைத்த தகவலின் பெயரில் காவல் துறை தனிப்படையினர் அவனைத் தேடி வந்தனர். இதனையடுத்து மாதவரம் மஞ்சம்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த நாகராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கொலை செய்ய மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.