சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து ஊழியர்களை தாக்கிய ரவுடி கும்பல்

சென்னை திருமங்கலத்தில் சூப்பர் மார்க்கெட் ஊழியர்களை தாக்கி, கடையை சூறையாடிய ரவுடி ரஞ்சித் குமார் என்பவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை திருமங்கலம் பகுதியில் 18 வது பிரதான சாலையில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு தனது கூட்டாளிகள் 10 பேருடன் சேர்ந்து கடையின் உள்ளே நுழைந்த ரஞ்சித்குமார், அங்குள்ள சிசிடிவி கேமிராக்களை சேதப்படுத்தி, கடையில் வேலை செய்யும் பெண் ஊழியர் மற்றும் கார்த்திக் என்பவரை கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, கல்லா பெட்டியில் இருந்த 52 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளார். இது குறித்து சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், காதல் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினை என்பது தெரியவந்தது. மேலும், தகராறில் ஈடுபட்ட ரஞ்சித் குமார் என்பவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் மேலும் பலரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

Exit mobile version