சென்னை காசிமேட்டில் ரவுடி திவாகர் கொலை – கொலை செய்த 6 பேர் கைது

சென்னை காசிமேட்டில், ரவுடி திவாகரை 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது, பார்ப்போரை பதற்றமடையச்செய்யும் அந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள்  தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை காசிமேட்டில் ரவுடி திவாகரை, அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் விமல், ஸ்டீபன், வேல்முருகன், அந்தோணிராஜ், சரத்குமார் ஆகியோர் வெட்டி கொலை செய்தனர்.

கொலை சம்பவம் தொடர்பாக, 6 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திவாகர் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

Exit mobile version