கன்னியாகுமரி அருகே தகராறில் ஈடுபட்ட ரவுடியை தட்டிக்கேட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கேரள எல்லைப் பகுதியான இளஞ்சிறை பகுதியில், கடையில் பொருட்கள் வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் என்பவர் ராஜ்குமாரை தடுக்க முயன்றர். அப்போது ராஜ்குமார் அருகில் மறைத்து வைத்திருந்த வெட்டு கத்தியை எடுத்து வில்சனை வெட்டி விட்டு தப்பிச் செல்ல முயன்றார். அப்போது, பொதுமக்கள் ரவுடியை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ராஜ்குமார் மீது கொலை கொள்ளை உட்பட பல வழக்குகளில் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதனிடையே, கத்தியால் வெட்டுப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.