சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷ், மீது கொலை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜாமீனில் வெளிவந்த ஆற்காடு சுரேஷ் ஆந்திராவில் தலைமறைவாக இருந்துகொண்டு, அவரது கூட்டாளிகள் மூலம் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்தநிலையில், புளியந்தோப்பு பகுதியில் உள்ள அவரது காதலியை சந்திப்பதற்காக வந்த சுரேஷை காவல் துறையினர் கைது செய்தனர்.
Discussion about this post