காஞ்சிபுரத்தில் காட்சியளித்து வரும் ஸ்ரீ அத்தி வரதர் வைபவம் இன்றுடன் கடைசி நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் நின்று, 6 மணி நேரம் காத்திருந்து இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற பட்டாடை அணிந்து காட்சியளிக்கும் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.
40 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு காட்சி தரும் அத்தி வரதர் நாளை அனந்தசரஸ் குளத்தில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட உள்ளர். இன்று நிறைவு நாள் என்பதால் பக்தர்கள் வருவதை பொருத்து இரவு முழுவதும் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடந்த 46 நாட்களில் ஒரு கோடியே ஒரு லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.