பழநி மலைக்கோவிலில் பக்தர்கள் வசதிக்காக 9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கப்பட்டது.
பழனி மலைக்கோவிலில், கொரோனா அச்சம் காரணமாக மார்ச் மாதம் முதல் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து, மீண்டும் ரோப் கார் சேவையை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரோப் கார் பெட்டிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு, மீண்டும் இயக்கப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், டிக்கெட் கவுன்டர் திறக்கப்படாது என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 500 பக்தர்கள் மட்டுமே ரோப் காரில் செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.