வயிற்றுக்குள் இருந்த 35 கிலோ கட்டி- மருத்துவர்கள் அதிர்ச்சி

மூன்று குழந்தைகள் இருப்பது போன்று வயிற்றுடன் மருத்துவமனைக்கு சென்ற பெண்ணை ஸ்கேன் செய்தபோது  அதிர்ச்சி உண்மை சீனாவில் அரங்கேறி உள்ளது..

சீனாவில் மிஸ் ஹங்க் என்ற பெண்ணிற்கு திடீரென கர்ப்பம் தரித்த போல் வயிறு பெரிதாகிக் கொண்டே வந்துள்ளது.மூன்று குழந்தைகள் வயிற்றுக்குள் இருப்பதைப் போல் வயிறு பெரிதாகிக் கொண்டே வந்துள்ளது.

ஒரு கட்டத்தில் மூச்சுவிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்ற ஹங்க்குக்கு பரிசோதனை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.அதனைத் தொடர்ந்து  அவருக்கு ஸ்கேன் செய்த  மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி  காத்திருந்தது. அந்தப் பெண்ணிற்கு 35 கிலோ எடையுள்ள கட்டி வளர்ந்து வந்திருப்பதும் கருப்பு நிற திரவம் அதில் இருப்பதையும் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கட்டியை அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.மேலும் வாழ்நாளில் எவ்வளவு பெரிய கட்டியை பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளனர்.

Exit mobile version