மத்திய அரசு சார்பாக நாடு முழுவதிலும் உள்ள பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு ரோஜ்கர் மேளா திட்டத்தின் மூலம் பணி நியமன ஆணை வழங்கப்படுள்ளது. இதனை பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணிக்கு சேர்ந்துள்ள தேர்வர்களுக்கு காணொளி மூலம் டெல்லியிலிருந்து பணி ஆணையும் பணி சம்பந்தமான ஆலோசனைகளையும் பிரதமர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த ரோஜ்கர் மேளா திட்டம் இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இன்று சென்னையில் மட்டும் 71,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. இந்த பணி நியமன நிகழ்வானது சென்னையிலுள்ள இராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள எம்.ஆர்.சி நகரில் அமைந்துள்ள இமேஜ் அரங்கத்தில் நடைபெறுகிறது. மத்திய அரசின் சார்பாக, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் செளத்ரி அவர்கள் 71,000 பேருக்கு ரோஜ்கர் மேளா திட்டம் மூலம் பணி நியமன ஆணை வழங்க உள்ளார்.
இந்த பணி நியமனமானது மத்திய அரசின் சுங்கத்துறை, இரயில்வே, மத்திய நிதித்துறை அமைச்சகம் தொடர்பான நியமனங்களாக இருக்கும் என்று சொல்லப்ட்டுகிறது. மேலும் இந்தியா முழுவதும் இந்த ரோஜ்கர் மேளாத் திட்டத்தில் தேர்வான தேர்வர்களுக்கு அந்தந்த துறை அமைச்சர்களினால் பணிநியமனம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.