புதிய நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த தமிழ்!

தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் – துன்னி
வளர் செம்பொன் னெங்கு (ம்) திகழ
நான்முக னாதியாய பிரமாபுரத்து
மறை ஞான ஞான முனிவன்

தானறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆனசெல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள் வராணை நமதே.

என்ற தேவாரப் பாடல் ஒலிக்க புதிய செங்கோல் நாடாளுமன்றத்தில் நேற்றுப் பொருத்தப்பட்டுள்ளது.

நேற்று காலை 7:30 மணிக்கு பிரதமர் மோடி காந்திசிலையை வணங்கினார். பின் தமிழக ஆதினங்கள் தமிழ் திருமுறைகளை ஓதினார்கள். தமிழ் ஆதினங்களிடம் ஆசீர்வாதம் வாங்கிய பிறகு செங்கோலை புதிய நாடாளுமன்றத்திற்குள் எடுத்துச் சென்றார். அப்போது அரோகரா என்று முருக வழிபாடு பாடப்பட்டது. மேலும் சைவ திருமுறைகள் 2ஆம் திருமுறையில் உள்ள மந்திரமாவது நீறு பாடலும், 7ஆம் திருமுறையில் உள்ள அடியார்க்கு அடியார் பாடலும், கோளறு பதிகத்திலுள்ள வேயுறு தோளி பங்கன் பாடலும் பாடப்பட்டது.

Exit mobile version