Sickle Cell Anaemia (SCA) Elimination Mission 2047! இந்தியாவை அச்சுறுத்தும் இந்த நோயின் பின்னணி என்ன?

சிக்கில் செல் (அ) அரிவாள் செல் அனிமியா என்றால் என்ன?

உடலில் உள்ள உயிரணுக்களுக்கு ஆக்சிஜனை வழங்கும் பொறுப்புடைய ஹீமோகுளோபின் அளவினைப் பாதிக்கும் ஒரு நோய் குழுதான் சிக்கில் செல் நோய் ஆகும். இதில் இரத்த சிவப்பணுக்கள் அரிவாள் வடிவத்தில் இருப்பதால் இதனை அரிவாள் வகை செல் நோய் என்றும் கூறுவர். மேலும் இதனை பிறைவடிவ செல் அனிமியா என்றும் ஒரு சில நிபுணர்கள் அழைப்பது உண்டு. இந்த செல்களானது மரபு வழியாக குழந்தைகளுக்கு கடத்தப்பட்டு பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இந்த சிக்கில் செல்லின் கொண்ட பெற்றோர்களுக்கு இது பெரிதாக பாதிப்பினை ஏற்படுத்தாது. ஆனால் இந்த பெற்றோர்களின் வழி பிறக்கும் குழந்தைக்கு இந்த செல் அனிமியா நோயினைக் கொடுக்கின்றது. சாதாரண சிவப்பு அணுக்களை ஒப்பிடும்போது இதன் வாழ்நாட்கள் குறைவு. சாதாரணமாக மனிதர்களுக்கு இரத்த சிவப்பணுக்களின் வாழ்நாட்கள் 90-120 நாட்கள் ஆகும். ஆனால் சிக்கில் செல் அனிமியா பாதிக்கப்பட்டவர்களுக்கு 10-20 நாட்களே சிவப்பணுக்களின் வாழ்நாட்கள் ஆகும்.

நோயின் அறிகுறிகள்…!

குழந்தைப் பருவத்தில் இருந்தே ஒருவருக்கு சிக்கெல் செல் நோய் இருக்கும். இருந்தாலும் குழந்தை பிறந்து முதல் 5-6 மாதங்களுக்கு எந்த அறிகுறியும் வெளிப்படாது. ஆரம்ப வயது அல்லது 40 வயதுகளுக்கு பிறகே வெளிப்படத் துவங்கும். ஆரம்ப அறிகுறிகளாக இரத்த சிவப்பணுக்களில் இரத்த உறைவு ஏற்படும். இரத்தசோகை மற்றும் மஞ்சள்காமாலை போன்றவை ஏற்படும். ஆனால் இவையெல்லாம் ஆரம்ப அறிகுறிகள்தான். பிற்பகுதியில் இரத்தத்திஒல் குறைந்த ஆக்ஸிஜனை வழங்குவதன் காரணமாக உடலில் எந்தவொரு பகுதியிலும் அதாவது ஒரே நேரத்தில் ஒரு இடத்திற்கும் மேல் வலியானது ஏற்படும்.

கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கும் முறை…!

கர்ப்பகாலத்தின் போது அல்லது பிறந்தவுடன் சிக்கில் செல் நோய் மிகவும் அதிகமாக கண்டறியப்படுகிறது. ஒரு நேர்மறையான குடும்ப வரலாறு இருந்தால் நீங்கள் இந்த நோயைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சிக்கில் செல் நோயைக் கண்டறிய பின்வரும் சில சோதனைகள் செய்யப்படுகின்றன.

முழுமையான இரத்த எண்ணிக்கை, ஹீமோகுளோபின் எலக்ட்ரோபோஸிஸ் மூலம் அசாதாரண ஹீமோகுளோபின் அளவை பரிசோதித்தல், மறைந்திருக்கும் தொற்றுக்களை கண்டறிய சிறுநீர் பகுப்பாய்வு, மறைந்த நிமோனியாவை கண்டறிய மார்பக எக்ஸ் கதிர்கள் சோதனை மற்றும் இரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை வழியாக உட்செலுத்துதல் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடல் வெப்பநிலையைத் தவிர்க்க வேண்டும். அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் தரப்படும் சில வலி நிவாரணிகள் மூலம் கடுமையான வலிகளைத் தடுத்துக் கொள்ளலாம்.

2047ல் சிக்கில் செல் அனிமியா இல்லாத இந்தியா…!

இந்தியாவை எடுத்துக்கொண்டால் இந்த நோயினால் பழங்குடியின மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் மொத்தம் 706 விதமான பழங்குடியின மக்கள் உள்ளனர். இவர்களில் 8.6 சதவீதம் நபர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிக அளவு மக்கள் பாதிக்கப்பட்டு இறப்பானது ஏற்படுகிறது. எனவே மத்திய அரசு சிக்கில் செல் அனிமியாவை இந்தியாவில் இருந்து முழுமையாக விரட்டி அடிப்பதற்கான நடவடிக்கையினை எடுக்க ஆயத்தமாகியுள்ளது. முக்கியமாக பழங்குடியினக் குழைந்தைகள் இதனால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே 2047க்குள் இந்த சிக்கில் செல் அனிமியாவை இந்தியாவில் இருந்து முற்றிலும் விரட்டி அடிப்பதற்கு சிக்கில் செல் அனிமியா எலிமினேசன் மிஷன் ஒன்றினை மத்திய அரசு துவங்கியுள்ளது.

Exit mobile version