கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா 80 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
கொரோனா தடுப்பு பணிக்காக அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள், பல்வேறு பிரபலங்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான ரோகித் சர்மா 80 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். 45 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதியத்துக்கும், 25 லட்ச ரூபாயை மகாராஷ்டிரா முதலமைச்சர் நிவாரண நிதியத்துக்கும் அவர் வழங்கியுள்ளார். மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 10 லட்ச ரூபாயை ரோகித் வழங்கியுள்ளார்.