ரோகித் சர்மா சதம்!

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணியானது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட்த் தொடரில் விளையாட உள்ளது. அதன் முதல் டெஸ்ட் நேற்று வியாழன் கிழமைத் தொடங்கியது. 177 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணியினர் ஜடேஜா மற்றும் அஸ்வின் சுழலில் சிக்கினர். இந்திய அணி தனது இன்னிங்சை தொடங்கியது. கேஎல் ராகுல் 20, அஸ்வின் 23, புஜாரா 7, கோலி 12, சூர்யகுமார் யாதவ் 8 ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற ரோகித் சர்மா நிலைத்து நின்று ஆடி சதம் விளாசி உள்ளார். அவருடன் தற்போது களத்தில் ஜடேஜா உள்ளார். தற்போது வரை ரோகித் சர்மா 175 பந்துகளில் 102 ரன்கள் எடுத்துள்ளார். அணியினை சரிவிலிருந்து மீட்டுள்ளார் ரொகித். அணியின் தற்போதைய ரன் நிலவரம் 187/5 ஆகும்.

Exit mobile version