2019ம் ஆண்டில் தொடக்க வீரராக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டியில் 9 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா 63 ரன்களும் , கே.எல்.ராகுல் 77 ரன்களும், கேப்டன் விராட் கோலி 89 ரன்களும் குவித்தனர்.
இதில் ரோகித் சர்மா இந்த ஆண்டில் தொடக்க வீரராக ஆடி அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 3வது ஒருநாள் போட்டியில் 9 ரன்களை கடந்த போது ரோகித் சர்மா இந்த சாதனையை படைத்தார். நேற்றைய 63 ரன்களையும் சேர்த்து அவர் 2019ம் ஆண்டில் 3 வகையான போட்டிகளிலும் 2,442 ரன்கள் குவித்துள்ளார்.
இதன்மூலம் 22 ஆண்டு கால சாதனையை அவர் முறியடித்துள்ளார். இதற்குமுன் இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜெயசூர்யா 1997-ம் ஆண்டில் 2387 ரன் எடுத்ததே சாதனையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.