பாகிஸ்தானுக்கு எதிராக ரோஹித்-ராகுல் இணை புதிய சாதனை

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை தொடரில் ரோஹித், ராகுல் இணை முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா,பாகிஸ்தான் அணிகள் விளையாடின. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா களமிறங்கினர். இந்த இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களை கடந்தது. இதன் மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களை கடக்கும் முதல் இந்திய இணை என்ற பெருமையை ரோஹித் , கே.எல்.ராகுல் பெற்றனர்.

Exit mobile version