கொரோனா தொற்றாமல் உதவும் வகையில் ரோபா கண்டுபிடிப்பு!

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவ செவிலியர்களுக்கு பதிலாக செயல்படும் ரோபா ஒன்றை சென்னையை சேர்ந்த இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.சென்னை கொளத்தூரை சேர்ந்த பிரேம் என்ற அந்த இளைஞர் 20 கிலோ எடைக் கொண்ட இந்த ரோபோவுக்கு, நர்சிங் ரோபோ என பெயர் சூட்டியுள்ளார். இந்த ரோபோ, செல்போன் செயலி மூலம் இணைக்கப்பட்டு தனது பாதையில் 100 மீட்டர் வரை சரியாக செல்லும் ஆற்றல் கொண்டது, மின்னேற்றம் செய்து இரண்டு மணி நேரம் தொடர்ந்து இயங்க கூடிய இந்த ரோபா, வீடியோ கால் வசதிகளுடன் நோயாளிகளுடன், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துரையாடி தேவையான மருந்து, உணவு ஆகியவற்றை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், உடலின் தட்ப வெப்ப நிலை, கிருமி நாசினி, குடிநீர் என அனைத்தையும் உள்ளடக்கி உள்ள இந்த சிறிய வகை ரோபோவை தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் இன்டர் நெட் வசதியில்லை என்றாலும் எளிதான முறையில் இயக்கமுடியும் என பிரேம் தெரிவிக்கிறார். தொற்று நோயான கொரோனா, மனிதர்களுக்கு பரவாமல் இருக்க இத்தகைய ரோபோக்கள் பெரும்பணியாற்றுமெனவும் அவர் கூறுகிறார்.

Exit mobile version