நில மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவின் 4 கோடியே 62 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் ராபர்ட் வதேராவுக்கு தொடர்புடைய நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கியது. இந்த நிலங்களை அதிக விலைக்கு விற்றதாகவும் இதில் பண மோசடி நடைபெற்றதாவும் அமலாக்கதுறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் ராபர்ட் வதேராவும் அவரது தாயார் மவ்ரீனும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்கள். கடந்த 4 நாட்களக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான 4 கோடியே 62 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.