ராபர்ட் வதோராவின் முன் ஜாமினை ரத்து செய்ய வேண்டும்: அமலாக்கத்துறை மனுத்தாக்கல்

மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள ராபர்ட் வதோராவுக்கு வழங்கப்பட்டுள்ள முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது.

சட்டவிரோதமாக பண பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கி குவித்ததாகவும் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதோரா மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ராபர்ட் வதோராமற்றும் அவரது உதவியாளருக்கு முன் ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ராபர்ட் வதோராவுக்கு வழங்கியுள்ள முன் ஜாமீனைத் ரத்து செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி வதோரா சாட்சிகளை கலைக்க முயற்சி செய்வதாக தெரிவித்துள்ள அமலாக்கதுறை, முன் ஜாமீனை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது

Exit mobile version