சென்னை திருமங்கலம் காவல் நிலைய பெண் அதிகாரியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் ஆஷா. இவர் அம்பத்தூர் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 10ஆம் தேதி வீட்டில் இருந்து பட்டரைவாக்கம் வழியாக சென்றுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், பெண் காவலரின் கழுத்தில் அணிந்திருந்த ஏழரை சவரன் நகையை பறித்து சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று சூளைமேடு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிரஷித் தீபா வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞரை மடக்கிபிடித்து விசாரித்தனர். அவரது பெயர் ராகுல் என்பதும், திருமங்கலத்தில் பணியாற்றி வரும் பெண் காவலரின் நகையை பறித்தும் தெரிய வந்தது.
அவனைக் கைது செய்த போலீசார் மற்றொரு வழிப்பறி கொள்ளையனான பூபாலானை தேடி வருகின்றனர்.