தேனி கம்பம் மெட்டு சாலை பணிகள் நிறைவடைந்து சாலை போக்குவரத்து துவங்கியுள்ளது. இதையடுத்து ஏலத்தோட்ட விவசாயிகள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால், மலைச்சாலை பலத்த சேதமடைந்து வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த சாலையை செப்பனிட தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில், இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு 2 கோடியே 55 லட்சம் நிதியை ஒதுக்கி மலைச்சாலையில் தார்சாலை போடப்பட்டு தற்பொழுது பணிகள் முடிந்துள்ளன.
தற்பொழுது இந்த சாலையில் வாகனப் போக்குவரத்து துவங்கியுள்ளது. இதையடுத்து ஏலத்தோட்ட விவசாயிகள் மற்றும் ஏலத்தோட்ட வேலைக்கு செல்வோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாலை பணிகளை விரைந்து முடித்த நெஞ்சாலை துறை மற்றும் தமிழக அரசுக்கு பணியாளர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் நன்றி தெரிவித்தனர்.