திருக்கோவிலூர் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருக்கோவிலூர் அருகே காவல்துறையால் நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இந்த வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் காவல்துறையினர் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணியை திருக்கோவிலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பத்மாவதி கொடியசைத்து துவங்கி வைத்தார்.

பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பதாகைகளை ஏந்தி, மணம்பூண்டியில் இருந்து அரகண்டநல்லூர் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்றனர்.

Exit mobile version