கம்பம் மெட்டு மலைப்பாதையில் சாலை சீரமைக்கும் பணி துவக்கம்

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் இருந்து கேரளா செல்லக்கூடிய கம்பம் மெட்டு மலைப்பாதையில், இரண்டரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளா செல்லக்கூடிய பிரதான வழிச்சாலையான கம்பம் மெட்டு சாலையில், தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கஜா புயலின்போது, இந்த சாலை மிகவும் சேதமடைந்தது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், சாலையை சீரமைப்பதற்காக 2 கோடியே 55 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியது. சாலை அமைக்கும் பணியினை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் துவக்கி வைத்தார். இன்னும் இரண்டு வார காலத்திற்குள் இந்த சாலை பணிகள் முடிக்கப்படும் என்றும், அதுவரை, காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version