தமிழகத்தில் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்து: 15 பேர் காயம்

சென்னை மற்றும் திண்டிவனம் ஆகிய இரு இடங்களில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லி அருகே, பூந்தமல்லி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சாலையை கடந்த பார்த்திபன் என்பவர் மீது பேருந்து மோதிய விபத்தில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பேருந்து கண்ணாடியை உடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதே போல், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, அடுத்தடுத்து ஆம்னி பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில், 15 பேர் பலத்த காயமடைந்தனர். சென்னையிலிருந்து அறந்தாங்கி நோக்கி 48 பயணிகளுடன் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.அந்த பேருந்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, அதன் முன் சென்ற வேன் திடீரென நின்றதால், ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்த பேருந்து, வேன் மீது மோதியது. இதனால் அடுத்தடுத்து பேருந்துகள் மோதி விபத்திற்குள்ளானது. இதில் சுமார் 15 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 

Exit mobile version