வண்ணாந்துறையில் பாவாடை காணாமல் போனா கூட எங்கள தான் கேப்பீங்களா? – கொதிக்கும் பிளாக் ஷீப்

கேமர் மதனுக்கு ஏன் அவார்டு கொடுத்தோம்..? என்பது குறித்து  பிளாக் ஷீப் (Black SheeP) யூடியூப் சேனலைச்சேர்ந்த ஆர்ஜே விக்னேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

பெஸ்ட் கேட்டகிரி மற்றும் செல்ஃப் நாமினேஷன் என்ற இரண்டு வகைகளில் ப்ளாக் ஷிப் விருதுகள் வழங்கப்பட்டன. பெஸ்ட் கேட்டகிரியை பொறுத்தவரை ப்ளாக்ஷிப் குழு பரிந்துரைத்து அதை ஜீரிஸ் தேர்ந்தெடுத்து விருதுகளை அறிவிப்பார்கள். அதுபோல செல்ஃப் நாமினேஷன்.. ஒரு சேனல் அவர்களாகவே முன் வந்து நாமினேட் செய்து கொள்ளலாம்.

தொழில்நுட்பம் இல்லையா? விஷ நித்தியும், விஷபாட்டில் மதனும் – ஒரு ஒப்பீடு…

அவங்களை தெரிந்தவர்களும் நாமினேட் செய்யலாம். அப்படி வந்தபோது, நாமினேஷனில் மதன் பெயரை தவிர்க்க முடியவில்லை. அதுக்குப்பிறகு விழுந்த வாக்குகளும் இந்த சேனலுக்கே விழுந்தது. இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. கெட்டவார்த்தை பேசுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், மதன் அபியூஸ் செய்வார் என எங்களுக்கு தெரியவில்லை.

மேடைக்கு அவர் விருது வழங்க வருவதற்கு முன்பு வரை கூட யாரும் இதுகுறித்து ஆட்சேபனை செய்யவில்லையே?! அப்படித்தான் எங்களுக்கும். மதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதில் எங்களுக்கும் எந்த மாற்றுகருத்தும் இல்லை. அதன் அடிப்படையில் தான் நாங்களும் அவருக்கு கொடுத்த விருதை திரும்ப பெற்றுக்கொண்டோம்.

யூ ட்யூபர் மதனை பிடிக்க முடியாமல் திணறிவரும் தனிப்படை – மனைவி மற்றும் தந்தையிடம் விசாரணை…

மேலும், அறியாமையில் நாங்கள் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். வன்னாந்தரையில் பாவடை காணாமல் போனால் கூட எங்களை தான் கேட்பீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version