ட்விட்டரில் சண்டை போட்ட RJ பாலாஜியும் – விஷ்ணு விஷாலும்…

RJ பாலாஜியின் ‘LKG’ படம் வரும் 22ந் தேதி ரிலீஸ் ஆகுகிறது. இந்நிலையில், வரும் 22ந் தேதி அன்று படத்தின் முதல் காட்சி காலை 5 மணிக்கே திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக RJ பாலாஜி-க்கும், விஷ்ணு விஷாலுக்கும் இடையே ட்விட்டரில் ஒரு சண்டையே நடந்துள்ளது. 5 மணி காட்சியை விமர்சித்து விஷ்ணு விஷால் ட்வீட் ஒன்றை போட்டார். அதில், “5 மணி காட்சிக்கு மதிப்பு இல்லாமல் போகிவிட்டது.. இது ஏமாற்று வித்தை..” என்று ட்விட்டரில் விஷ்ணு விஷால் கூறினார்.

அதற்கு ட்விட்டரில் பதிலளித்த RJ பாலாஜி, “ஆம் நான் கூட இது ஏமாற்று வித்தை என்று நினைத்தேன்.. ஆனால் தியேட்டர் உரிமையாளரிடம் கேட்ட போது தான் தெரிந்தது … எங்களுக்கு கிடைத்தது சீட் அல்ல மெரிட் சீட் ” என்று கூறினார்.

RJ பாலாஜியின் இந்த பதிலை கடுமையாக விமர்சித்து மீண்டும் ட்வீட்டை போட்டார் விஷ்ணு விஷால், அதில் “முதலில் உங்களை சுற்றியுள்ளவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்… சிறு பட்ஜெட் படங்களுக்கு அதிகாலை 5 மணி காட்சி கிடைப்பதில் மகிழ்ச்சி. இது சினிமாவுக்கு நல்லது. ஆனால் ஆக்கர்பூர்வமான விமர்சனம் என்ற பெயரில் எப்பொழுது பார்த்தாலும் மக்களை தவறாக வழிநடத்தும் சிலரை பார்த்து தான் கவலையாக உள்ளது… ” என்றார்.

RJ பாலாஜியும், விஷ்ணு விஷாலும் ட்விட்டரில் சண்டை போட்டது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version