ஆட்களை மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் ரிஸ்வான் காஸ்கர் கைது

மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிமின் தம்பி மகனான ரிஸ்வான் காஸ்கரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

ஆட்களை மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் ரிஸ்வான் காஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற அவரைக் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாவூத் இப்ராகிம் மற்றும் சோட்டா ஷாகிலுடன் தொடர்புடையவராக கருதப்படும் அகமத் ரஸா கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ரிஸ்வான் காஸ்கரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பின் உதவியுடன் இந்தியாவில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் அகமது ரஸா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version