ஆறுகள், கால்வாய்களில் இருந்து சென்னையில் நாள் ஒன்றுக்கு 60 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெங்கு கொசுக்களை ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாநகராட்சி சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது அதில், டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்களை பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் பொருட்டு, ஆறுகள், கால்வாய்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 60 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் கழிவுகளை கொட்டிய நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.