குழந்தைகள் விளையாடும் பொருட்களில் ஆபத்து

குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொருட்கள் மூலமாக அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக ஆய்வுகள்மூலம் தெரியவந்துள்ளது.

உங்கள் குழந்தைகள் விளையாடும் ஸ்மார்ட் விளையாட்டு பொருட்கள் மூலம் முன் பின் அறிமுகம் இல்லாதவர்கள் கூட அவர்களை தொடர்புகொள்ள முடியும் என்கிறது ஒரு அதிர்ச்சி தரும் ஆய்வு. லண்டனை சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் 7 குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொருட்களில் மற்றவர்கள் குழந்தைகளை தொடர்பு கொள்ள முடியும் என்று கூறியுள்ளனர். அதில் குழந்தைகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் வாக்கிய டாக்கி, இசைக்கு ஏற்றார் போல் பாட்டு பாடும் காரோக்கி கருவி போன்றவை அடங்கும்.

இந்த விளையாட்டு பொருட்கள் பிளூடூத் மூலமோ ஒய் வைமூலமோ மற்றவர்களால் தொடர்புகொள்ள முடியும் …எடுத்துக்காட்டாக ஒரு வாக்கி டாகியில் 2 கருவிகள் இருக்கும்…ஒரு கருவி மற்றொரு கருவியை தொடர்புகொள்ள பயன்படும் ஆனால் இதன் மூலம் வெளியில் உள்ள நபர்களும் தொடர்புகொள்ளக்கூடிய வசதி இருப்பதாகவும் இதனால் குழந்தைகளை முன் பின் தெரியாத நபர்களும் தொடர்பு கொள்ள முடியும் என்ற அதிர்ச்சிகர தகவலை கூறுகின்றனர். ஆபத்தான விளையாட்டு பொருட்களில் Vtech’s KidiGear Walkie Talkies முக்கிய இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த விளையாட்டு கருவியின் மூலம் 200 மீட்டர் தொலைவில் இருந்துகொண்டே குழந்தைகளிடம் அந்நியர்களால் தொடர்புகொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளனர். Xpassion karokie, கருவியிலும் SMK250PP என்ற பாட்டு பாடும் கருவியில் கூட அந்நியர்களால் குழந்தைகளை ப்ளூதூத் மூலம் தொடர்புகொள்ள முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

இப்படி ஆபத்தான விளையாட்டு பொருட்களில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுவது எப்படி என்பதை நாம் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் நினைக்கலாம் நம் குழந்தைகளை இந்த விளையாட்டுப்பொருட்களை வைத்து யார் என்ன செய்யப்போகிறார்கள். இப்படி தான் யாரும் எதிர்பார்க்காமல் குழந்தைகளின் மனதில் தற்கொலை எண்ணத்தை விதைத்தது ப்ளூ வேல் என்ற ஆன்லைன் விளையாட்டு. குழந்தைகளின் கைகளின் இருக்கும் விளையாட்டு பொருட்களில் மற்றவர்கள் தொடர்பு கொள்ளாதவாறு நாம் பொருட்களை வாங்கிக்கொடுக்கவேண்டும். மேலும் கூர்மையான ஆயுதம் நெருப்பு போன்றவற்றிலும் குழந்தைகளை விளையாட விட கூடாது.

Exit mobile version