கிடுகிடுவென உயர்ந்து வரும் காய்கறி விலை

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கிடுகிடுவென உயர்ந்து வரும் காய்கறி விலையால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

குடியாத்தம் காய்கறி சந்தையில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் காய்களின் வரத்து குறைந்து உள்ளதால் காய்கறிகள் கடும் விலை உயர்வை கண்டுள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக சின்ன வெங்காயம், முருங்கை, பூண்டு, கேரட், பீன்ஸ், அவரை, கத்திரிகாய் போன்றவை கடுமையான விலை உயர்வை கண்டுள்ளது.

கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாம்பார் வெங்காயம் தற்போது 90 ரூபாய்க்கும், 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பூண்டு 140 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதேபோல் பீன்ஸ் 80 ரூபாய்க்கும் அவரைகாய் 80 ரூபாய்க்கும் விற்பனையானது. டீசல் விலை உயர்வால் லாரி வாடகை உயர்ந்துள்ளதாகவும், விலை ஏற்றத்தால் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

Exit mobile version