இலங்கை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தனது சகோதரரை கைது செய்து விசாரணை நடத்தவில்லை என வர்த்தக துறை அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 21 ஆம் தேதி புனித ஞாயிறு பண்டிகை கொண்டாட்டத்தின் போது புனித செபாஸ்டியன் தேவாலயம் உள்ளிட்ட 9 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தன. இந்த கொடூரமான தற்கொலைப்படை தாக்குதலுக்கு 253 பேர் பாலியாகினர். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து இந்த தாக்குதல் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதலுக்கு காரணமான தற்கொலைபடை தீவிரவாதிகள் குறித்து சிசிடிவி பதிவுகள் அண்மையில் வெளிவந்த நிலையில், தற்போது அதன் திருப்பமாக அனைத்து இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வர்த்தக துறை அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் சகோதரரை அந்நாட்டு ராணுவத்தினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் பரவின.
வவுனியா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மறுப்பு தெரிவித்துள்ளார். அதுபோல எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறியுள்ளார்.