மொபைல் மற்றும் லேண்ட்லைன் தொலைபேசிகளில் இன்கமிங் அழைப்புக்கான ரிங்டோன் நேரத்தைக் குறைத்து டிராய் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக டிராய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்கமிங் அழைப்புக்கான ரிங்டோன் நேரங்கள் செல்ஃபோனில் 30 வினாடிகளாகவும், லேண்ட்லைன் தொலைபேசிகளில் ஒரு நிமிடமாகவும் நிர்ணயம் செய்யப்படுவதாகவும், இது வரும் 15 நாட்களுக்குள் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது. முன்னதாக ஜியோ நிறுவனமானது தனது நெட்வொர்க் இணைப்புகளை பிற நெட்வொர்க் இணைப்புகளில் இருந்து அழைக்கும் இன்கமிங் அழைப்புகளுக்கான ரிங்டோன் நேரத்தைக் 30 வினாடிகளாக குறைத்தது. இதன்காரணமாக இன்கமிங் அழைப்பைத் தவிர்ப்பதன் மூலம், தனது நெட்வொர்க்கில் அவுட்கோயிங் அழைப்பை அதிகரித்ததாக ஜியோ மீது மற்ற நிறுவனங்கள் புகார் அளித்ததுடன், தாங்களும் அவ்வாறே செய்வதாக தெரிவித்தன. இந்நிலையில், டிராய் நிறுவனம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.