திருவண்ணாமலையில் நெல் நடவு செய்யும் பணிகள் தீவிரம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் விவசாய நெல் நடவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக அப்பகுதியை சுற்றி உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் வயலில் நாற்றுகளை விட்டு, குண்டு, பொன்னி, எடி.டி.43 உள்ளிட்ட நெல் ரகங்களை நடவு செய்து வருகின்றனர். மேலும் தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் மூலம் நீர் நிலைகள் தூர்வாரப்பட்டதால் தங்களுக்கு பெரும் உதவியாக இருந்ததாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version