தமிழகத்தில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 வாக்காளர்கள் இருப்பதாக திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக, திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டார். கடந்த மார்ச் 26ஆம் தேதி வெளியிடப்பட்ட துணைப்பட்டியலின் அடிப்படையில் இந்த தகவல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 வாக்காளர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

வயது வாரியாகவும் தொகுதி வாரியாகவும், வெளியிடப்பட்ட இந்த வாக்காளர் பட்டியலில் 30 வயது முதல் 39 வயது வரை இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கையே அதிகளவில் இருக்கிறது. இவ்வயதினர் 1 கோடியே 39 லட்சத்து 44 ஆயிரத்து 994 பேர் இருப்பதால், இவர்களது வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும் எனவும் கூறப்படுகிறது.

Exit mobile version