அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

மதுரை அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வருகிற 15ஆம் தேதி நடைபெறுகிறது. இதேபோல், பாலமேட்டில் வருகிற 16ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வினய் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஜல்லிக்கட்டு காளைகள் செல்லும் பாதை, வாடிவாசல், மாடுகள் வந்து சேரும் இடம் என அனைத்து இடங்களையும் அவர் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் வினய், இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 700 காளைகளுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என்றார்.

Exit mobile version