இடைத் தேர்தலில் போட்டியிடத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்களின் பரிசீலனை

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்களின் பரிசீலனை நடைபெற்று வருகிறது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளிலும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி நேற்று முடிவுற்றது. அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்ச் செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி நாராயணனும் வேட்பாளர்களாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் 18 சுயேச்சை  வேட்பாளர்கள் உட்பட 28 பேரும், நாங்குநேரி தொகுதியில் 21 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 46 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 18 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்பு மனுக்களின் பரிசீலனை நடைபெற்று வருகிறது. தகுதியுள்ள மனுக்கள் ஏற்கப்பட்டுத் தகுதியில்லா மனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும்.

வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 3ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அக்டோபர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 24ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்.

Exit mobile version