நாமக்கலில், கடத்தலுக்கு தயாராக இருந்த 12 யூனிட் காவிரி ஆற்று மணலை வருவாய்த்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
மோகனூரை அடுத்த ஒருவந்தூர் பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் சாக்கு மூட்டைகளில் மணலை கடத்துவதாக வருவாய் துறையினருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து மோகனூர் வட்டாட்சியர் கதிர்வேல் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது ஆற்று பகுதியில் 1000க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 12 யூனிட் மணலை கைப்பற்றிய அதிகாரிகள், பொக்லைன் இயந்திரம் மூலம் மூட்டைகளை அகற்றினர். ஆற்றுப் பகுதியில் செல்லும் பாதைகளை குழி வெட்டி தடுத்தனர். மணல் கடத்தலில் ஈடுபட்டு வருபவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.