அரக்கோணம் இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்… பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்ததாகக் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது…
அரக்கோணம், நன்னுமீரான் சாயபு தெருவை சேர்ந்தவர் சங்கர் இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகின்றார். இவரது மகன் பிரவீன் இவர் அந்த பகுதியில் துரித உணவகம் நடத்தி வந்தார்.பிரவீன் கடந்த 15-ந் தேதி இரவு அரக்கோணம் மசூதி தெரு பகுதியில் நடந்து சென்றபோது 5 பேர் கொண்ட கும்பல் ஒடஒட விரட்டி வெட்டி அவரை கொலை செய்தது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக பிரவீன் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிரவீனை அரக்கோணம் புதிய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்த சசிக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. இந்த நிலையில் நேற்று எஸ்.ஆர்.கேட் பகுதியில் சென்று கொண்டிருந்த சசிக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் பிரவீன் கொலை தொடர்புடைய விண்டர்பேட்டையை சேர்ந்த அஜீத் பன்னீர்செல்வம் மற்றும் இரண்டு சிறார்கள் உட்பட ஐந்து பேரை காவல்துறையின் கைது செய்தனர்.
பின்னர் குற்றவாளிகளிடம் நடப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த 2015-ஆம் ஆண்டு மோகன் என்பவர் அரக்கோணம் அருகே கொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்துடன் பிரவீனை கொலை செய்ததாக கொலை செய்தவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர். பின்னர் அரக்கோணம் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தி முன்று நபர்களை வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும் இரண்டு சிறார்களை சிறுவர் சிர்த்திருத்த பள்ளியிலும் சிறையில் அடைத்தனர்.