மருத்துவத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் சந்திப்பு

சிவகங்கை அருகே தமிழ்நாடு மருத்துவத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், 30 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் தமிழ்நாடு மருத்துவத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் 100க்கும் மேற்பட்டோர் 30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நோய்களை தீர்க்க உதவும் முறைகளான கைதட்டும் முறைகளையும், சிரிக்கும் முறைகளையும் கற்றுக் கொடுத்தனர். ஒரு விரல், இரண்டு விரல் என பத்து விரல்களை கொண்டு கைதட்டும் முறைகளையும், நடனமாடிக்கொண்டே சிரித்தல், கையைத் தூக்கிக் கொண்டு சிரித்தல் என பல சிரிப்பு முறைகளையும் செய்து காண்பித்தனர். எளிதான யோகாசன பயிற்சி செயல் விளக்கம் மற்றும் நினைவுப்பயிற்சியும் அளிக்கப்பட்டது. பின்னர் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Exit mobile version