இங்கிலாந்து பட்டத்து ராணி மக்கள் பணியிலிருந்து ஓய்வு

இங்கிலாந்து நாட்டு அரசின் முக்கிய முடிவுகளில் அரச குடும்பத்தின் தலையீடும் அடங்கியிருக்கும். இப்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அந்த நாட்டு பட்டத்து ராணி இரண்டாம் எலிசபெத் முக்கியப் பொறுப்புகளிலிருந்து விலகி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 94 வயதாகும் ராணியின் 68 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், அதிக நாட்கள் மக்கள் பணியில் ஈடுபடாமல் முடங்கியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

கொரோனாவால் 2 லட்சத்து 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, முப்பத்து 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஐந்து கட்டங்களாக ஊரடங்கை தளர்த்த உள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொரோனா தொற்று முற்றிலுமாக நீங்கினாலும், பட்டத்து ராணி இரண்டாம் எலிசபெத் பணிக்கு திரும்ப மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, விண்ட்சர் கேஸ்டிலில் அரசர் பிலிப்புடன் இருக்கும் ராணி,  உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பால் இனிமேல் மக்கள் பணிகளில் ஈடுபடமாட்டார் என அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version