தமிழக தொல்லியல்துறையின் கீழடியில் நடைபெற்ற 4ம் கட்ட ஆய்வு முடிவுகளின் தொகுப்பை “கீழடி வைகை நதிக்கரையில் சங்ககால நாகரீகம்” என்ற தலைப்பில் வெளியானது. மேலும் அந்த ஆய்வின் முடிவுகளின்படி கீழடி தொல் பொருட்கள் கி.மு. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது உறுதியானது. களிமண், செங்கல், இரும்பு ஆணிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அங்குள்ள வீடுகள் கட்டப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
அங்கு கண்டெடுக்கப்பட்ட பெயர்கள் பொறிக்கபட்ட பானை ஓடுகள், கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே தமிழ்சமூகம் எழுத்தறிவு பெற்றிருந்ததை உறுதிப்படுத்தியுள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக ட்விட்டரில் #கீழடி_தமிழர்_நாகரீகம் என்ற Hashtag சென்னை ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. அதன்கீழ் ஏராளமானோர் தமிழர்களின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.