ராணுவத்தில் பணியாற்றாத நபர்களுடன் எந்தவொரு சமூக ஊடகக் குழுவிலும் அங்கம் வகிக்க கூடாது என ராணுவஅதிகாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பாதுகாப்பு மீறலைத் தடுக்க, அதிகாரி மட்டும் குழுக்களை அவ்வப்போது சரிபார்க்கும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கியமான ராணுவ தகவல்கள் வாட்ஸ் ஆப் குழுக்களின் மூலம் கசிவதாகவும் எந்த நேரமும் செல்போன்கள் கண்காணிக்கப்படுவதாகவும் வீரர்களை உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால் ராணுவ வட்டாரங்களில் பரபரப்பு உருவானது. மேஜர் ஜெனரல், லெப்டினனட் ஜெனரல் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் அவசியமில்லாத வாட்ஸ் ஆப்
குழுக்களில் இருந்து வெளியேறினர். 13 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்கள் ஏராளமான வாட்ஸ் ஆப் குழுக்களை உருவாக்கி தகவல்களையும் வீடியோக்களையும் பரிமாறி வருகின்றனர்.
இதில் முக்கியமான ராணுவ ரகசியங்களும் தெரிந்தோ தெரியாமலோ பரிமாறப்படுவது தீவிரவாதிகளுக்கும் எதிரிகளுக்கும் சாதகமாகி விடுகிறது. சமூக வலைதளங்களில் ராணுவ வீரர்களை குறிவைக்கும் அழகான பெண்களால் புதிய ஆபத்துகள் உருவாகின்றன. படைகளின் நகர்வு, முகாம்கள், ஆயுதபலம் போன்ற முக்கியத் தகவல்கள் எதிரி
நாடுகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் கிடைப்பதாக கூறப்படுகிறது