முல்லைப் பெரியார் அணையைக் கட்டிய பென்னி குயிக் சிலைக்கு மரியாதை

தேனி – கொல்லம் தேசிய நெடுஞ்சாலைக்கு ஜான்பென்னி குயிக் பெயரைச் சூட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியார் அணையைக் கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக்-ன் 108-வது நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. தேனியைச் சேர்ந்த ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாய சங்கம் சார்பில், பென்னி குயிக் உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

Exit mobile version