கொரோனாவுக்கு எதிராக களத்தில் போராடிவரும் மருத்துவர்களுக்கு மரியாதை!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு போராளிகள், முப்படைகளின் சார்பில் மலர் தூவி கவுரவிக்கப்பட்டனர்.

கொரோனா தடுப்புப் பணியில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள், தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகின்றனர். நாடு முழுவதும், கொரோனா தடுப்புப் போர் வீரர்கள் மீது, முப்படைகளின் சார்பில் ஹெலிகாப்டர்களில் இருந்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர், கடலோரக் காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலமாக மலர்களை தூவி கவுரவிக்கப்பட்டனர். தங்களது அர்ப்பணிப்பு உணர்வுக்காக வழங்கப்பட்ட மரியாதையை அவர்கள் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டனர்.

இதேபோன்று, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கவுரவிக்கப்பட்டனர். தங்களது அர்ப்பணிப்பு உணர்வுக்காக வழங்கப்பட்ட மரியதைக்காக, கரவொலி எழுப்பி நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version