8 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் முறையாக இல்லை-சபாநாயகர் ரமேஷ்குமார்

13 பேரின் ராஜினாமா கடிதங்களில், 8 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் முறையாக இல்லை என கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

ராஜினாமா செய்த 10 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமாரை நேரில் சந்தித்து விளக்கமளித்தனர். இதையடுத்து பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் ரமேஷ்குமார், தற்போதைய சூழலில் யாரையும் பாதுகாப்பதோ, விலக்குவதோ தனது வேலையல்ல என்றும், ஜூலை 6ம் தேதி ராஜினாமா கடிதம் அளித்த எம்.எல்.ஏக்கள், அதற்குமுன்பு தன்னிடம் நேரம் கேட்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் 8 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்களில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் ஏராளமாய் உள்ளன என்றும், சபாநாயகர் என்ற முறையில் தனக்கென ஒரு கடமை உள்ளது என்றும், இந்த ராஜினாமா கடிதங்கள் மீது மின்னல் வேகத்தில் முடிவு எடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். இது தமது பொதுவாழ்வில் விநோதமான சூழ்நிலை என்றும் ரமேஷ்குமார் விவரித்தார்.

Exit mobile version